நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை

தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டாக்டராகும் கனவுகளுடன் படிக்கும் மாணவர்களுக்கு நீட் என்பது கட்டாயமாகிவிட்டது. இதனால், நீட் தேர்வுக்காக மாணவர்கள் பள்ளி வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே தயாராகி வருகின்றனர். இதற்காக சிறப்பு வகுப்புகளும் ஆங்காங்கே நடத்துகின்றனர்.

தமிழக அரசு சார்பிலும் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் வணிக நோக்கத்துடன் கூடிய நிறுவனங்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதைதவிர, தனியார் பள்ளி மாணவர்களை நீட் பயிற்சிக்கு சேர கட்டாயபடுத்தக் கூடாது, தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தவிர நீட் பயிற்சிக்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அரசு அங்கீகரித்து பாடங்களை மட்டுமே தனியார் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்றும் இந்த உத்தரவுகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் வகுப்பு நேரங்களில் பாடங்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் நீட் போன்ற பயிற்சிகளுக்கான வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் அறிவித்துள்ளது.

You'r reading நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் பாஜக பின்தங்கியுள்ளது- முரளிதர ராவ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்