குரூப்-1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணியாளர் தேரவாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுல் பொது பிரிவினருக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக அவ்வப்போது தேர்வுகள் நடத்தி வருகிறது. அரசுப் பணியாளர்கள் தேர்வுகளில் ஒன்று குரூப் 1 தேர்வில் எழுதுவோருக்கான வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் இதுதொடர்பான அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

அதில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான வயது வரம்பு 35ல் இருந்து 37 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 30ல் இருந்து 32 ஆகவும் உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு குறித்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

You'r reading குரூப்-1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கைது செய்யப்பட்ட சீமான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்