எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்: 1189 கைதிகள் விடுதலை

எம்ஜிஆரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி 1189 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எம்ஜிஆரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழக சிறைகளில் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை பெற்றுவருபவர்கள் சிறையில் ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 138 சிறைச்சாலைகளில் பெண்களுக்காக 5 சிறப்பு மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள மொத்தம் 22 ஆயிரத்து 792 பேர் அடைத்து வைக்கும் வசதியில் 16 ஆயிரம் பேர் உள்ளனர்.

இந்நிலையில், எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிறையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த 311 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுவித்துள்ளது.

இதைதொடர்ந்து, வரும் மாதங்களில் 1189 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

You'r reading எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்: 1189 கைதிகள் விடுதலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய சூர்யா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்