மக்களின் நலன் கருதி ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் - அமைச்சர்

தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை சென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் விபத்துகாய நிலைக்குழு அமைக்கப்படும். அணைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் விபத்துக்காய சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும்.

மேலும் தமிழகத்தில் விபத்துகளால் நடைபெறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கைய ை குறைக்க 108 ஆம்புலன்ஸ் சேவைகளை விரிவுபடுத்தும் முதல் படியாக 1000 அம்புலன்ஸஸ்கள் மேலும்கூடுதலாக இணைக்கப்படும் என்றும். இதன்மூலம் விபத்து ஏற்படும் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல முடியும். கிராமப்புறங்களில் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்படும் என்றும் கூறினார்.

You'r reading மக்களின் நலன் கருதி ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் - அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்த ஸ்டாலின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்