புறப்பட்டு சென்ற கனிமொழி, பொன்முடி மீண்டும் மருத்துவமனைக்கு வருகை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டிற்கு புறப்பட்ட கனிமொழி, பொன்முடி ஆகியோர் மருத்துவமனைக்கு மீண்டும் விரைந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடல் உறுப்புகள் சீராக இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதன்பிறகு, மு.க.ஸ்டாலின், கனிமொழி, எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு வீட்டிற்கு புறப்பட்ட கனிமொழி மற்றும் பொன்முடி மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

You'r reading புறப்பட்டு சென்ற கனிமொழி, பொன்முடி மீண்டும் மருத்துவமனைக்கு வருகை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவமனை அறிக்கை கவலை அளிக்கிறது: தமிழிசை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்