முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல்: செக்யூரிட்டி கைது

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த, திருநெல்வேலியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலை சேர்ந்தவர் மரிராஜா. கோவையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர், தனது சொந்த பிரச்னைகள் குறித்து தீர்வு காண வேண்டும் என மரிராஜா, பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால், இவரது மனுவுக்கு ஒரு முறைகூட பதிலோ அல்லது நடவடிக்கையோ எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மரிராஜா இன்று காலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வெடிகுண்டு வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொல்லப்போறேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மரிராஜாவின் போன் எண்ணைக் கொண்டு டிராக் செய்தனர். இதில், மரிராஜா இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பிறகு, மரிராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனது சொந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், அதனால் தனது பிரச்னையை அனைவரது கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பொய்யாக வெடிகுண்டு மரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, மரிராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல்: செக்யூரிட்டி கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிலக்கரி இறக்குமதி முறைகேடு: வழக்கு தொடர மு.க.ஸ்டாலின் முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்