மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறது

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதன்பிறகு, கடந்த 14ம் தேதி திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், இந்த கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி மட்டும் பேசப்பட்டது.

இந்நிலையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து விவாகதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவிற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் வெங்கையா நாயுடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்