எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு: அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சென்னை கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

இது சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமையும் இரண்டாவது வளைவாகும். இதற்கு முன்பு, சட்டப்பேரவை வைரவிழா வளைவு கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய அடிக்கல் நாட்டு விழாவில், சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த வளைவு, சுமார் 66 அடி அகலம் 52 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு: அடிக்கல் நாட்டினார் முதல்வர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவுக்கு ‘நோ நோ’ சொன்ன மலேசிய பிரதமர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்