பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டதும் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட பெண்ணை கைது செய்யப்பட்டதை அடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்ததும் அங்கிருந்த சோபியா என்ற பெண் திடீரென பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனால், தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழிசை சோப்பியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பின்னர், விசாரணையில் அந்த பெண் மருத்துவரின் மகள் சோபியா (23) என்பதும், கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்ததும் நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உத்தரகாண்டில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 13 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்