அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு நிதி

தமிழகத்தில் 26,263 அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில், மத்திய அரசின் சமகரா சிக் ஷா என்ற திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், நல்ல சூழலில் கல்வி கற்பதற்கு ஏதுவான வசதிகளை உருவாக்க, மத்திய அரசு மானியம் வழங்கி உள்ளது.

தமிழகத்தில், 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமாக உள்ள 28,263 அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 90 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை பகிர்ந்து வழங்க, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சதுரங்கவேட்டை-2 படம்... நடிகர் அரவிந்தசாமி வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்