ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டி.டி.வி தினகரன் முன்னிலை

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 2ம் சுற்றிலும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 7276 வாக்குகள் பெற்ற முன்னிலையில் உள்ளார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. இதன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 257, திமுக 92, சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 412, பாஜக 6, நாம் தமிழர் கட்சி 0 வாக்குகள் பெற்றனர். இதில், டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவிலும், டிடிவி தனகரன் 7276 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், மதுசூதனன் 2738 மற்றும் மருதுகணேஷ் 1182 வாக்குகள் பெற்றும் பின்தங்கி உள்ளனர்.   

You'r reading ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டி.டி.வி தினகரன் முன்னிலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து:37 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்