பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மருத்து படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாலிதீன் பயன்படுத்துவதற்கான தடை இன்று முதல் அமல் செய்யப்பட்டுள்ளது.

இதைதவிர, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டும் வழக்கம்போல் பொதுத்தேர்வுகள் நடைபெறும். இருப்பினும், இதன் மதிப்பெண் உயர்கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ப்ளஸ் 2 மதிப்பெண் மட்டுமே உயர்கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் 1200ல் இருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களின் மன அழுத்தம் குறையும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

You'r reading பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?- நீதிமன்றம் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்