மணல் லாரி உரிமையாளர்கள் ஆளுநரை சந்திக்க முடிவு

ஆளுநரை சந்திக்க மணல் லாரி உரிமையாளர்கள் முடிவு

பொதுப்பணித் துறையை நிர்வாகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், கனிம வளத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தையும் பதவி நீக்கக் கோரி மணல் லாரி உரிமையாளர்கள் ஆளுநரிடம் மனு அளிக்க இருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நவம்பர் மாதம் 9 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் பேரணியாக சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கப் போவதாக கூறினர்.

சவுடுமண், மணல், எம்சாண்ட் என அனைத்திலும் ஊழல் நடந்து வருவதாகவும் அதில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், மணல் லாரி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். 

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் தரமானதாக இல்லை என்றும், தற்போது அந்த மணலை அரசு விற்பதில் இருந்து சூழ்ச்சி வெளிப்பட்டிருப்பதாகவும் மணல் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, தமிழகத்தில் நடந்த கனிமவள கொள்ளை குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அல்லது சிலை கடத்தல் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் விசாரணை குழு அமைக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading மணல் லாரி உரிமையாளர்கள் ஆளுநரை சந்திக்க முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெறிச்சோடியது சவூதி... வேலையை இழக்கும் இந்தியர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்