ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு.....!

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில் கட்டணம் இருமடங்கு

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற ஊட்டி மலை ரயில் குன்னூர் வரை டீசல் இன்ஜின் மூலமும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர், நீராவி இன்ஜின்  பொருத்தப்பட்டு இயங்கும் ரயிலில் பயணிக்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

குன்னூர்- ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரயில்வே அதிகாரிகள் இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க ஒரு நபர் ஒன்றுக்கு ரூ.30-ம், ஊட்டி- குன்னூர் இடையே பயணிக்க ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படூம் என தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் அக்டோபர் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

You'r reading ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு.....! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாஸை கைது செய்த போலீஸ் - சென்னையில் பரபரப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்