தமிழக அரசு ஆன்லைன் மணல் விற்பனை...!nbsp

தமிழக அரசு ஆன்லைன் மணல் விற்பனை...!nbsp

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண், சென்னை துறைமுகம் வந்துள்ளது. இந்த மண்ணை ஆன்லைன் மூலம் தமிழக அரசு விற்பனை செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஆற்று மணலில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வதற்கான முடிவை தமிழக அரசு எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் இதற்கான டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஔரேலியா என்று சொல்லப்படுகின்ற கப்பலில் 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணலுடன் புறப்பட்டு கப்பலானது இன்று அதிகாலை 1.20 மணி அளவில் சென்னை அருகே உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை வந்தடைந்தது எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை வந்தடைந்த அந்தக் கப்பலில் இருந்த மணலை இறக்கும் பணியானது தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் இறக்குவதற்காக காமராஜர் துறைமுகத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் 48 மணி  நேரத்திற்குள் நிறைவடையும் என்று காமராஜர் துறைமுகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப் பணிகளுக்காக உயர்தரமான ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக காமராஜர் துறைமுகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும் இந்த மணல் பொதுப்பணித் துறை மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது‌.

டிஎன் தமிழக அரசின் இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மணலை அதில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு பொதுப்பணித்துறை மணலை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும். ஆனால்,இப்பணிகள் அனைத்தும் நடைமுறைக்கு வரவில்லை நடைமுறைக்கு வந்த பின்னரே பொதுமக்களுக்கு சென்றடையும்.

You'r reading தமிழக அரசு ஆன்லைன் மணல் விற்பனை...!nbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை கொன்று குவிக்கும் மர்மநபர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்