தீபாவளிக்கு 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு: தமிழக அரசு

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்காக சுமார் 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், வெளியூர்களில் இருந்து சென்னையில் பணி அல்லது படிப்புக் காரணமாக வந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இருப்பதால், பயணிகளின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சுமார் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் நவம்பர் 3,4 மற்றும் 5ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகைக்கு பிறகு 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த பேருந்துகள் கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

You'r reading தீபாவளிக்கு 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு: தமிழக அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடிக்கு 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருது: ஐ.நா அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்