மேல்மருவத்தூர் அருகே சிலை குவியல்..!

மேல்மருவத்தூர் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 100 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷா இல்லத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2 நாட்கள் சோதனை நடத்தினர். ஆய்வின் முடிவில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஐம்பொன் சிலைகள், 22 கல்தூண்கள், பழங்கால கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இதனைதொடர்ந்து, ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சோதனை தொடர்கிறது. அந்த வரிசையில், மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடி கிராமத்தில் உள்ள ரன்வீர்ஷா பண்ணை வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

அங்கு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த100க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலை குவியல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தொழிலதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

You'r reading மேல்மருவத்தூர் அருகே சிலை குவியல்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விவசாயிகளின் பேரணியால் டெல்லியில் வன்முறை வெடிக்கும் அபாயம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்