இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரூ.1000 தீபாவளி பரிசு: புதுச்சேரி அரசு அறிவிப்பு

Diwali gift announced for Pondicherry people

புதுச்சேரியில் ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு மக்கள் தயாராகி வருகின்றனர். புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டியை முன்னிட்டு ஆண்டுதோறும், இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலை வழங்குவது குறித்து அறிவிப்பு எதுவும் புதுச்சேரி அரசு சார்பில் வெளியிடவில்லை.

இதனால், எதிர்கட்சிகள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், இலவச வேட்டி, சேலைகளுக்கு பதிலாக பணம் வழங்கக்கோரி வலியுறுத்தினர்.

கோரிக்கையை ஏற்ற முதல்வர், ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே, புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி கூப்பன் ரூ.1000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரூ.1000 தீபாவளி பரிசு: புதுச்சேரி அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ஹாலோவின்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்