என்ன கொடுமைசார்!பட்டாசு வெடித்த 80 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

Case for 80 children cracked fireworks

தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது. அதோடு தமிழக அரசு பட்டாசை வெடிக்க புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்நிலையில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக கூறி 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். மேலும் 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

இந்நிலையில் தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சில பகுதிகளில் சிறுவர்கள் ஆர்வ மிகுதியால் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் பட்டாசு வெடித்துள்ளனர்.

அவ்வாறு தமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்தற்காக திருப்பூர், கோவை மற்றும் நெல்லையில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading என்ன கொடுமைசார்!பட்டாசு வெடித்த 80 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆர்த்ரைடிஸை குணப்படுத்தும் பப்பாளி விதை...எப்படி தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்