சென்னையில் இன்று ரேஷன் கார்டு பெயர் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு

Ration card name address change Chennai

சென்னையில் உள்ள 17 மண்டல அலுவலகங்களில் இன்று ரேஷன் கார்டுகளில் பெயர், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரங்களை தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நாடத்தப்படுகிறது.

அதன்படி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையை சேர்ந்த, சென்னையில் உள்ள 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநதியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும், நுகர்வோருக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 17 மண்டல பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You'r reading சென்னையில் இன்று ரேஷன் கார்டு பெயர் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க எளிய வழிகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்