ஓட்டுனருக்கு ரூ.436, கண்டக்டருக்கு ரூ.429

சென்னை: பேருந்து வேலை நிறுத்தம் போராட்டத்தினால், பேருந்துகளை இயக்க தினக்கூலி தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக, ஒட்டுனருக்கு ரூ.436, கண்டக்டருக்கு ரூ.429 என சம்பளம் நிர்ணயித்து உள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிபதி உத்தரவிட்டும் பயனில்லாமல் போராட்டம் நீடித்து வருகிறது.

இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்குவதால், பொது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், தற்காலிக ஓட்டுனர்கள், கண்டக்டர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்களே பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

இவர்களுக்கான தினக்கூலி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, தினக்கூலியாக ஓட்டுனருக்கு ரூ.436ம், கண்டக்டருக்கு ரூ.429ம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

You'r reading ஓட்டுனருக்கு ரூ.436, கண்டக்டருக்கு ரூ.429 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிவேக ரன் குவிப்பில் சாதனை செய்துள்ள ஸ்டீவ் ஸ்மித்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்