கஜா புயல் மக்கள் பீதியடைய வேண்டாம் - தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

Cyclone likely to hit Cuddalore,chennai,nagai says, TamilNadu Weatherman

கஜா புயல் குறித்து ஓரிரு தினங்களில் புயலைப் பற்றிய துல்லியமான விவரங்கள் கிடைக்கும் என்றும், மக்கள் பீதியடைய வேண்டாம் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

கஜா புயல் காரணமாக வரும் 15 ஆம் தேதி கடலோர வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதே போல் 16 ஆம் தேதி உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புயலானது கடலூர், சென்னை, புதுச்சேரி கடலூர், நாகை உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், 24 மணி நேரத்திற்கு பின்புதான் சரியாக எங்கு கரையை கடக்கும் என்பதை கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது வர்தா புயல் போல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், புயல் கரையை கடக்கும் பகுதியில் கன மழையை கொடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் 'கஜா’ புயல்- தமிழகத்துக்கு 'ரெட் அலர்ட்'

You'r reading கஜா புயல் மக்கள் பீதியடைய வேண்டாம் - தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டி20 கிரிக்கெட் போட்டி: சென்னை சேப்பாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்