அழகப்பா பல்கலைக் கழக பாடப் புத்தகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம் நீக்கத்தால் சர்ச்சை

Anna play goes off TN university textbook

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பாடப் புத்தகத்தில் இருந்து அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து மீண்டும் அந்நாடகம் பாடப் புத்தகத்தில் நீடிக்கும் என அழகப்பா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியார் பெயரில் சாதி அடையாளம் சேர்க்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இப்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் சுற்றறிக்கை ஒன்று சர்ச்சையாகி உள்ளது.

அந்த அறிக்கையில், முதுகலை தமிழ் பாடத்தில் பகுதி 1 தமிழ் பாடத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துமத காப்பியங்களை கடுமையாக விமர்சிக்கக் கூடிய நாடகம் நீதிதேவன் மயக்கம்.

நீதிதேவன் மயக்கம் நீக்கப்பட்டதற்கு கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய அறிக்கையை திரும்பப் பெறுவதாக அழகப்பா பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

You'r reading அழகப்பா பல்கலைக் கழக பாடப் புத்தகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம் நீக்கத்தால் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வலதுசாரிகள் அரசியலால் மனிதத் தன்மை இல்லாத நிலை உருவாகிறது: பிரகாஷ்ராஜ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்