மோடி ஆட்டம் முடிந்தது..இனி நானே பிரதமர்... ரஜினியிடம் பேரம் பேசிய நிதின் கட்காரி Exclusivenbsp

Rajini on anti modi meet

பிரதமர் மோடிக்கு எதிரான பாஜக கோஷ்டியின் மந்திராலோசனையில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்தை பாஜகதான் தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அரசியலில் ஒரு சொலவடை உண்டு... அமெரிக்காவின் மென்மை முகம் நார்வே...கோர முகம் இஸ்ரேல் என்பதுதான் அது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் மென்மை முகமாக அடையாளப்படுத்தக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்,. தமிழக பாஜக தலைவர் தமிழிசை தொடங்கி அத்தனை நிர்வாகிகளும் ரஜினிகாந்தை தூக்கி கொண்டாடுகின்றனர்.

அப்படியான ரஜினிகாந்த் அண்மையில் பேட்ட திரைப்படத்தின் சூட்டிங் முடிந்த உடன் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு சென்றார். இந்த சந்திப்பின் போது பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி சேர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் நிதின் கட்காரி.

ஆனால் ஜெர்க்கான ரஜினிகாந்தோ, தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கே இல்லையே.. எதிர்ப்புகளே அதிகம்.. நான் உங்களுடன் வெளிப்படையாக கூட்டணி வைத்தால் எனக்கு கிடைக்கக் கூடிய வாக்குகள் கூட கிடைக்காமல் போய்விடும்..அதனால் தனித்து போட்டியிடலாம் என்பதே என் திட்டம் என கூறியிருக்கிறார். அதே நேரத்தில் தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்க நான் தயங்கமாட்டேன் எனவும் உறுதியளித்திருக்கிறார்.

அப்போதுதான் நிதின் கட்காரி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். அதாவது இம்முறையும் பாஜக 250 இடங்களுக்கு அதிகமாக வென்றால் மோடியே பிரதமர்... அதே நேரத்தில் பாஜக 200க்கும் குறைவாக பெற்று பிற கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைக்க நேரிட்டால் மோடி பிரதமர் இல்லை.. எனக்கு அந்த வாய்ப்பு உள்ளது. என் செல்வாக்கு உங்களுக்கு தெரியும்.. உங்க கட்சியும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களை பெற்றால் எனக்கு உதவியாக இருக்கும் அல்லவா? என்று கூறியிருக்கிறார்..

இதை சற்றும் எதிர்பாராத ரஜினிகாந்த், இப்படி ஒன்று இருக்கிறதா? நான் யோசிக்கவில்லையே... என பதில் தந்திருக்கிறார். நிதின் கட்காரியோ, நீங்கள் கவலைப்படாதீர்கள்.. எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்.. உங்கள் கட்சி மட்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களை பெற்றுத் தாருங்கள்.. எனக்கு அது உதவியாக இருக்கும் அல்லவா? என தெரிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதாவுக்குள் இப்படி மோடிக்கு எதிராக ஒரு அணி இருக்கிறதை சற்றும் எதிர்பாராத ரஜினிகாந்த் இது வம்பாகிவிடுமோ என நினைத்து ஒரு பதிலை சொல்லி இருக்கிறார். அந்த பதிலை கேட்டு நிதின் கட்காரியே ஆடிப் போனாராம்.

இப்படி எல்லாம் நினைப்பாங்களா? அதுவும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த ஒருவர் இப்படி ஒரு முடிவை எப்படி எடுக்கிறாரோ? என மலைத்து போய்விட்டாராம்.. அப்படி என்னதான் ரஜினிகாந்த் சொன்னார்?

நாளை வரை காத்திருங்களேன்

- எழில் பிரதீபன்

You'r reading மோடி ஆட்டம் முடிந்தது..இனி நானே பிரதமர்... ரஜினியிடம் பேரம் பேசிய நிதின் கட்காரி Exclusivenbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய சாக்லேட் குக்கீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்