கஜா புயல்: கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சையில் நாளை விடுமுறை

Holiday for Cuddalore schools tomorrow

கஜா புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் கடலூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இப்புயல் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்க இருக்கிறது.

கஜா புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது இது மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இப்புயலானது சென்னைக்கு 540 கி.மீ., தொலைவிலும், நாகபட்டினத்துக்கு 640 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இந்த கஜா புயல் கரையை நெருங்கும் நிலையில் தமிழகம், புதுவைக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை,தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கஜா புயல்: கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சையில் நாளை விடுமுறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்