தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Rain in next 24 hours in Tamil Nadu Weather Research Center

கஜா புயல் கடந்ததை அடுத்து, வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் நேற்று கரையை கடந்துவிட்டது. ஆனால், அதே இடத்தில் நாளை மாலை புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததிருந்தது.

மேலும், வரும் 19ம் மற்றும் 20ம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். 21ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொள்ளவும் வாய்ப்புள்ளது.

இதன் எதிரொலியால், இன்னும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு, காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதைப் பொருத்து
மழையின் தீவிரம் குறித்து கணிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 18ம் மற்றும் 19ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இருளில் மூழ்கிய வேதாரண்யம்: 3வது நாளாக மக்கள் தவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்