பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

CM Edappadi Palanisamy to meet PM Modi on tomorrow

கஜா புயல் நிவாரண நிதி கோரி பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 9.40 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை நிலைகுலைய வைத்துவிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை பறிகொடுத்து நிர்கதியாக முகாம்களில் தங்கியுள்ளனர்.

கஜா புயல் பாதிப்புகளை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது கன மழை பெய்ததால் சில மாவட்டங்களில் சேத விவரங்களை பார்வையிடாமல் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நாளை காலை 9.40 மணிக்கு டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்தும் தேவையான நிவாரண நிதி குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனு அளிக்க இருக்கிறார்.

 

You'r reading பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒடிசாவில் பயங்கர விபத்து: பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்