நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

Minister Sengottaiyan says Schools will run asusual from tomorrow

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்எதிரொலியால், டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும். மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கஜா புயல் தாக்கத்தால், பள்ளிகளில் விழுந்த மரங்களில் சுமார் 70 சதவீதம் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

You'r reading நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக, தினகரனுக்கு செக் வைக்க அனைத்து வங்கிக் கணக்குக்கும் பணம்! - எடப்பாடியின் 'அடடே’ டெல்டா பிளான் Exclusive

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்