திருச்சியில் இருந்து 100 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்- ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்!

DMK sends Rs4 Crore Relief Materials

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு ரூ4 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை 100 லாரிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ1 கோடியை திமுக அறக்கட்டளை வழங்கியுள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் பாதிக்காத மாவட்டங்களில் இருந்து ரூ4 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை திமுகவினர் பெற்றுள்ளனர். இந்த நிவாரணப் பொருட்கள் 100 லாரிகளில் திருச்சியில் இருந்து இன்று புறப்பட்டது.

 

நிவாரணப் பொருட்கள் லாரிகளை திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி கொடியை அசைத்து அனுப்பி வைத்தார்.

You'r reading திருச்சியில் இருந்து 100 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்- ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 ஏக்கர் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன: வேதனையில் விவசாயி தற்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்