குட்கா வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம் - ஸ்டாலின் கண்டனம்

Stalin tweet against gutka case

குட்கா வழக்கை விசாரித்து வந்த இரு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் குட்கா வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதி்காரி கண்ணன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பாபு என்ற அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல மற்றொரு அதிகாரி பிரமோத் என்பவரும் மாற்றப்பட்டார். அதிகாரிகளின் இந்த மாற்றத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழக டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் விசாரணை நடத்தும் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் செய்வது உண்மை குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி; அதிகாரிகளின் மாறுதல்களை உடனே ரத்து செய்க என பதிவிட்டுள்ளார்.

You'r reading குட்கா வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம் - ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3-வது டி 20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்