7 தமிழர் விடுதலை... பாஜக கூட்டணிக்கு ரஜினி முன்வைக்கும் திடீர் நிபந்தனை- Exclusive

Rajini demands to relase Seven Tamils for BJP Alliance

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து பரிசீலனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் உளறி கொட்டி கடுமையான அதிருப்திக்குள்ளாகி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை வன்முறையாக சித்தரித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருப்பது குறித்த கேள்விக்கு யார் அந்த 7 பேர் என கேள்வி கேட்டார். இதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இதனால் மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி 7 தமிழர் பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தார் ரஜினிகாந்த். ஆனாலும் 7 தமிழர் விவகாரத்தில் ரஜினி மிகப் பெரிய பின்னடவைத்தான் சந்தித்தார்; அவருக்கு இருந்த சிறிதளவு செல்வாக்கும் சரிந்து போனது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.

இதனிடையே பாஜகவோ ரஜினிகாந்தை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவது என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. பாஜகவின் நெருக்கடியை தவிர்க்க முடியாமல் ரஜினிகாந்த் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் தற்போது தமது இமேஜை சரித்துவிட்ட 7 தமிழர் விடுதலை தொடர்பாக சாதகமாக ஒரு முடிவை பாஜக எடுத்தால் இருதரப்புக்கும் பயன் தரும்; தாமும் கூட்டணியில் சேர தயக்கம் இருக்காது என டெல்லிக்கு தூது விட்டாராம் ரஜினிகாந்த். இது குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என கூறியிருக்கிறதாம் டெல்லி.

- எழில் பிரதீபன்

You'r reading 7 தமிழர் விடுதலை... பாஜக கூட்டணிக்கு ரஜினி முன்வைக்கும் திடீர் நிபந்தனை- Exclusive Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேகதாது அணை- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேல்முருகன் வலியுறுத்தல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்