ஒரு வேளை உணவுக்காக தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்! டெல்டாவின் நிலைமை இது

Hunger Pains boy swims for a meal

கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்னும் டெல்டா மாவட்டங்கள் மீளவில்லை. மக்கள் வாழ்வதாரத்தை இழந்து உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள மஞ்சவாடி என்ற கிராமத்தில் சிறுவன் ஒருவன் உணவை பார்த்ததும் தண்ணீரில் குதித்து வேகமாக நீந்தி வரும் காட்சி மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களை உருக வைத்தது.

கீழே பதியப்பட்டிருக்கும் காணொளியில் காணலாம்.                                                                                                                     

வாகனம் செல்ல முடியாத பல கிராமங்களுக்கு உதவி இன்னும் சென்றடையவில்லை. இந்த சிறுவனைப் போன்று பலர் உதவி இல்லாமல்  தவித்து வருகின்றனர்.

உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நம்மால் முடிந்ததை செய்து உதவிக்கரம் நீட்டுவோம்.

You'r reading ஒரு வேளை உணவுக்காக தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்! டெல்டாவின் நிலைமை இது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பறவைகளை நேசித்த ரியல் 'பக்‌ஷி ராஜன்' கிழவன் சலீம் அலி யார்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்