ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து - தமிழக அரசு தகவல்- நீதிபதிகள் ஷாக்

RK Nagar 89crores distributed case cancelled TN Government

சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்த பதில் சர்ச்சையாகி உள்ளது.

சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் மூலம் ரூ. 89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த வழக்கை தமிழக அரசு ரத்து செய்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

ஆர்.கே.நகர் தேர்தலின் போது ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 4 ஆயிரம் வீதம் பணம் விநியோகிக்கும், 89 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வருமான வரித்துறை கைப்பற்றியது .

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் எப்.ஐ.ஆரை ரத்து செய்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

இந்த வழக்கு 2 நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் எப்.ஐ.ஆர். ரத்து எனக் கூறியதால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

You'r reading ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து - தமிழக அரசு தகவல்- நீதிபதிகள் ஷாக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் டிச.10ல் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்