ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி- 65 அமமுக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஐக்கியம்!

Senthil Balaj joins DMK on today

தினகரனின் அமமுக அமைப்புச் செயலாளரான முன்னாள் செந்தில் பாலாஜி தமது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பகல் 12 மணிக்கு திமுகவில் இணைந்தார்.

தினகரனின் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக இருந்தவர் செந்தில் பாலாஜி. தினகரன் கட்சியின் பல்வேறு செலவுகளுக்கு செந்தில் பாலாஜியை தான் தினகரன் அணுகி வந்தார்.

ஆனால் தினகரன் தரப்பில் இருந்து ஒரு பைசா கூட செந்தில் பாலாஜிக்கு போகவில்லை. மேலும் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்ற தினகரனின் முடிவும் செந்தில் பாலாஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் அமமுக நடவடிக்கைகளில் இருந்து தம்மை ஒதுக்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது.

இதை உறுதி செய்யும் வகையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஆயிரக்கண்க்கானோர் கரூரில் இருந்து நேற்று சென்னை புறப்பட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பகல் 12 மணிக்கு ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமானார். செந்தில் பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து ஸ்டாலின் வரவேற்றார். 

செந்தில் பாலாஜியுடன் 65 அமமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.

 

You'r reading ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி- 65 அமமுக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஐக்கியம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைகேடு: தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்