சிபிஐ நெருக்கியும் ஆட்டம் அடங்கவில்லை!- கலெக்சனை விடாத விஜயபாஸ்கர் பி.ஏ!

Vijayabaskar PA not bother about CBI

சிபிஐ விசாரணையால் அதிமுக அமைச்சர்கள் கதிகலங்கியிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் பதவி பறிபோகலாம் என்ற நிலையிலும், சுகாதாரத்துறையில் வேகம் வேகமாக கலெக்சன் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார் உதவியாளர் சரவணன்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியின் மூலம்
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரம் தேதிவாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த டைரி தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வருமானவரித் துறை பரிந்துரை செய்தது. ஆனால் விசாரணை தாமதமானதால் சி.பி.ஐ விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குட்கா ஊழல் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

சுமார் ஒன்பது மணி நேரத்துக்கும் மேல் நீடித்த விசாரணையால் அதிர்ச்சிடைந்துவிட்டார் அமைச்சர். அவரது உதவியாளர் சரவணனிடம் 3 நாட்கள் விசாரணை நடந்துள்ளது.

இதைப் பற்றி எடப்பாடியை நேரில் சந்தித்துப் பேசினார் விஜயபாஸ்கர். விவகாரம் சீரியஸாகச் சென்று கொண்டிருக்க, மந்திரி உதவியாளர் சரவணன் சுகாதாரத்துறையில் வசூல் மேளாக்களை அரங்கேற்றி வருகிறாராம்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் ஆலோசகராக இருக்கும் ஆனந்தன் மூலமாக நேற்று சில நிறுவனங்களிடம் பேசியுள்ளனர். நியூட்ரிஷியன் கிட் தொடர்பான ஒப்பந்தத்துக்கு வர வேண்டிய தொகைகளைப் பற்றி இருவரும் பேசியுள்ளனர்.

இந்த விஷயத்தில் சில நிறுவனங்களை மிரட்டியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத சுகாதாரத்துறை அதிகாரிகள், சிபிஐ விசாரணையால் நெருக்கடி முற்றிய போதும், இவர்கள் வசூலை நிறுத்தவில்லை. பதவி பறிபோவதற்குள் வர வேண்டியதைக் கறக்கும் வேலையை நடத்தி வருகிறார்கள். எந்தக் காலத்திலும் இவர்கள் திருந்தப் போவதில்லை எனத் தலையால் அடித்துக் கொள்கிறார்களாம்.

-அருள் திலீபன்

You'r reading சிபிஐ நெருக்கியும் ஆட்டம் அடங்கவில்லை!- கலெக்சனை விடாத விஜயபாஸ்கர் பி.ஏ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு- டிச.26-ல் பாமக போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்