லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தினகரனுடன் பேச்சுவார்த்தையா? அன்புமணி ராமதாஸ் விளக்கம்

Anbumani Ramadoss says PMK not discussed about parliamentary election alliance

பாமகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை! - தினகரனோடு பேசத் தொடங்கிய அன்புமணி

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

h

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகி வரும் கட்சிகள் தனித்தும், கூட்டணி அமைத்தும் போட்டியிட தீவிரமாக திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி தினகரனோடு போட்டியிடுவது குறித்து பேசத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடாதது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். அத்திக்கடவு- அவினாசி திட்டம் போன்ற பழைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

கணினிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 10 துறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பட்டாசு தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாமக கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தினகரனுடன் பேச்சுவார்த்தையா? அன்புமணி ராமதாஸ் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி ஓடும் ரயில்களிலேயே ஷாப்பிங் செய்யலாம் பயணிகளே..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்