திமுக மாநில இளைஞரணி செயலாளர் பதவியை கேட்கும் செந்தில் பாலாஜி- ஸ்டாலின் ஷாக்

Senthil Balaji asks DMK state Youth Secretary

கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியே விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கிறாராம் செந்தில் பாலாஜி. இது ஸ்டாலின் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.

திமுகவில் இளைஞரணி என்பது 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதன்பின்னர் ஸ்டாலின் திமுகவில் தலைவர் நிலைக்கு உயர்ந்துவிட்டார்.

திமுகவின் இளைஞரணி மாநில செயலாளராக வெள்ளகோவில் சாமிநாதனை ஸ்டாலின் நியமித்தார். ஆனால் வெள்ளகோவில் சாமிநாதன் எங்கே இருக்கிறார்? என கேட்கும் நிலையில்தான் அவரது செயல்பாடு இருக்கிறது.

இதனால் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அல்லது உதயநிதி வசம் இளைஞரணி பொறுப்பு போகலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுகவின் புதிய வரவான செந்தில் பாலாஜி இளைஞரணி மாநில செயலர் பதவி கேட்க தொடங்கி உள்ளாராம்.

இது தொடர்பாக மகேஷிடம் பேசிய செந்தில் பாலாஜி, என்னதான் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தாலும் இளைஞரணி மாநிலப் பொறுப்பு இருந்தால்தான் கொங்கு பெல்ட் இளைஞர்களை திமுக பக்கம் இழுக்க முடியும் என தூபம் போட்டிருக்கிறார்.

கொங்கு பெல்ட்டில் திமுக பலவீனமாக இருப்பதால் செந்தில் பாலாஜியின் விருப்பத்தை தட்டி கழிக்க முடியாமல், தலைவரிடம் பேசுகிறேன் என சொல்லி இருக்கிறாராம் மகேஷ்.

-எழில் பிரதீபன்

You'r reading திமுக மாநில இளைஞரணி செயலாளர் பதவியை கேட்கும் செந்தில் பாலாஜி- ஸ்டாலின் ஷாக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அண்ணே நீங்க டெல்லி பாருங்க... நான் கரூரை பார்க்கிறேன்... சின்னச்சாமியுடன் செந்தில் பாலாஜி ‘டீலிங்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்