அமெரிக்க தமிழ்ச் சங்க நிர்வாகி ஏற்பாட்டில் டின்னரில் ரஜினி- திருநாவுக்கரசர் சந்திப்பு!

Thirunavukkarasar meets Rajinikanth

என்னை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் ரஜினி கட்சிக்கு போவேன்.... ராகுலை மிரட்டிய திருநாவுக்கரசர்

கூட்டணி விவகாரத்தில் சாதித்த திமுக- திருநாவுக்கரசருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு! ராஜினாமா கடிதம் வாங்கினார் ராகுல்!

தலைவர் பதவிக்கு ஆபத்து....சிங்கிள் டிஜிட் தொகுதிகள் கூட ஓகே.. ஸ்டாலினிடம் சரண் அடைந்த திருநாவுக்கரசர்- கடுப்பான ராகுல்!

லைவர் பதவிக்கு வேட்டு - ராகுல் மீது கடும் அதிருப்தி- நள்ளிரவில் மகனுடன் அமெரிக்கா புறப்பட்ட திருநாவுக்கரசர்

 

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் டின்னர் ஒன்றில் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

(படம்: கோப்பு)

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என திருநாவுக்கரசரிடம் கடிதம் வாங்கிவிட்டார் ராகுல் காந்தி. இந்த கோபத்தில் அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றுவிட்டார் திருநாவுக்கரசர்.

லோக்சபா தேர்தல் நேரத்தில் தேசிய கட்சியின் மாநில தலைவர் இப்படி வெளிநாட்டுக்குப் போவதா? என்கிற குமுறல்கள் காங்கிரஸில் எதிரொலிக்கிறது.

சிங்கப்பூரில் கமல் ! அமெரிக்காவில் விஜயகாந்த், ரஜினி, திருநாவுக்கரசர்!!

மேலும் ஒரு ஆண்டாக கட்சி ஆரம்பிப்பதாக கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே தம்மை பதவியில் இருந்து நீக்கினால் ரஜினி கட்சிக்கு போவேன் என ராகுலுக்கு ஒரு மிரட்டல் தகவலை அனுப்பி வைத்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

இந்நிலையில்தான் அமெரிக்காவில் ரஜினிகாந்தை திருநாவுக்கரசர் ரகசியமாக சந்தித்துள்ளார். அமெரிக்காவில் இயங்கி வரும் தமிழ்ச் சங்கம் ஒன்றின் நிர்வாகிதான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாராம்.

அந்த தமிழ்ச் சங்க நிர்வாகியின் ஏற்பாட்டில் ஒரு ஹோட்டல் டின்னரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு ரஜினிகாந்த் சென்றது முதலே உளவுத்துறை அவரை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

-எழில் பிரதீபன்

You'r reading அமெரிக்க தமிழ்ச் சங்க நிர்வாகி ஏற்பாட்டில் டின்னரில் ரஜினி- திருநாவுக்கரசர் சந்திப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மெல்போர்ன் டெஸ்ட் : வெற்றியின் விளிம்பில் இந்திய அணி !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்