மகனோ, மருமகனோ அரசியலுக்கு வரும் வாய்ப்புகள் இல்லை.. வைரலாகும் ஸ்டாலினின் பழைய வீடியோ

MK Stalins video on family politics goes viral

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி பெயரில் அவரது ரசிகர்கள் விருப்ப மனு தாக்கல் செய்த தகவல் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதை எடுத்துப் போட்டு வைரலாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதில், என் மகனோ, மருமகனோ, குடும்பத்தில் பிற யாருக்கும் அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கும் வாய்ப்பில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு எதிர்க்கட்சியினர் கலாய்த்து வருகின்றனர்.

 

You'r reading மகனோ, மருமகனோ அரசியலுக்கு வரும் வாய்ப்புகள் இல்லை.. வைரலாகும் ஸ்டாலினின் பழைய வீடியோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆல் இந்தியா 'ரேடியோ’ வுக்கும் மூடுவிழா - மோடி அரசு பகீர் முடிவு?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்