மு.க.ஸ்டாலினுக்கு செக்.... சாதிக் பாட்சா மரண வழக்கை ரகசியமாக விசாரிக்கும் சிபிஐ

CBI again probe on Sadiq Basha death case

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க 2ஜி விவகாரத்தில் தொடர்புடைய சாதிக் பாட்சா மரண வழக்கை ரகசியமாக விசாரித்து வருகிறது சிபிஐ. அண்மையில் சாதிக் பாட்சாவின் மனைவி மற்றும் கெவின் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் ஸ்டாலின், அவரது தாயார் தயாளு அம்மாள், தங்கை கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதில் கனிமொழி, ஆ. ராசா இருவரும் திஹார் சிறைவாசம் அனுபவித்தனர்.

பின்னர் 2ஜி வழக்கில் யாருமே குற்றவாளிகள் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2ஜி வழக்கு விசாரணையின் போது ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சாவும் சிபிஐ அதிகாரிகளின் பிடியில் சிக்கி இருந்தார்.

ஆனால் திடீரென சாதிக் பாட்சா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விகாரத்தில் ஸ்டாலின் பெயரும் அடிபட்டது.

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் சாதிக் பாட்சா மரண விவகாரத்தை சிபிஐ தோண்டி வருகிறது.

சாதிக் பாட்சாவின் மனைவி மற்றும் கெவின் ஆகியோரிடம் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி தரவே இந்த விசாரணை என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

You'r reading மு.க.ஸ்டாலினுக்கு செக்.... சாதிக் பாட்சா மரண வழக்கை ரகசியமாக விசாரிக்கும் சிபிஐ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொடநாடு கொலைகள் விவகாரம்- விஸ்வரூபத்தின் பின்னணியில் அமித்ஷா- தினகரன்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்