வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு : தள்ளுபடி விலையில் கூகுள் மற்றும் ஐ போன்கள்

கூகுள் பிக்ஸல் மற்றும் ஐ வகை போன்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.

கூகுள் பிக்ஸல் மற்றும் ஐ வகை போன்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.

ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இணையத்தள விற்பனை நிலையங்கள் ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ், ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் கூகுள் பிக்ஸல் 2 வகை ஸ்மார்ட் போன்களை குடியரசு தினத்தை ஒட்டி இன்று முதல் டிசம்பர் 26 வரை தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.

ஐபோன்கள்:

ஃபிளிப்கார்ட் நிறுவனம் உண்மையான விலையான 64ஆயிரம் மதிப்புள்ள 64 ஜிபி மெமரி அளவுள்ள, வெள்ளி மற்றும் தங்க நிறத்திலான ஆப்பிள் ஐபோன் 8 போன்கள் 54ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 77ஆயிரம் மதிப்புள்ள 256 ஜிபி மெமரி அளவுள்ள கிரே நிறமுள்ள ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் போன்கள் 64ஆயிரத்து 499 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அதேபோன்று, அமேசான் நிறுவனம் 64 ஜிபி மெமரி அளவுள்ள கிரே நிறமுள்ள ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் [Apple iPhone 8] போன்கள் 55ஆயிரத்து 540 ரூபாய்க்கும், 64 ஜிபி மெமரி அளவுள்ள, வெள்ளி மற்றும் தங்க நிறத்திலான ஆப்பிள் ஐபோன் 8 [Apple iPhone 8] போன்கள் 55ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்கிறது.

மேலும் அமேசான் நிறுவனம், ஹெச்டிஎஹ்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதமும், ஃபிளிப்கார்ட் நிறுவனம் சிட்டிபேங்க் வாடிக்கையாளக்கு 10 சதவீதமும் உடனடி தள்ளுபடி விலையில் அளிக்கிறது.

கூகுள் பிக்ஸல்:

பிளிப்கார்ட் நிறுவனம் கறுப்பு நிற 64 ஜிபி மெமரி அளவுடைய கூகுள் பிக்ஸல் 2 [Google Pixel 2] வகை ஸ்மார்ட் போன்களை 47ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இது அசல் விலையில் இருந்து 21 சதவிகித தள்ளுபடி விலையாகும். இதில், ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு 8ஆயிரம் ரூபாயில் உடனடி தள்ளுபடியும் வழங்குகிறது.

128 ஜிபி மெமரி அளவுடைய 70ஆயிரம் மதிப்புள்ள மேற்சொன்ன வகை போன்களை 18 சதவிகித தள்ளுபடி விலையுடன் 56ஆயிரத்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. கூகுள் பிக்ஸல் 2 எக்ஸெல் [Google Pixel 2 XL] 15 சதவிகித தள்ளுபடி விலையுடன் 61 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

You'r reading வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு : தள்ளுபடி விலையில் கூகுள் மற்றும் ஐ போன்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - “சுராங்கனி.. சுராங்கனி..” பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் காலமானார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்