எல்ஜி டபிள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்: ஜூன் 26ம் தேதி அறிமுகம்

LG TO ANNOUNCE A NEW W-SERIES OF SMARTPHONES IN INDIA ON 26 JUNE, COULD BE CALLED W10

எல்ஜி நிறுவனம் 'W' வரிசையில் முதல் ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் ஜூன் 26ம் தேதி காலை 11:30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் பெயர் எல்ஜி டபிள்யூ10 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஸோமி, சாம்சங் மற்றும் ரியல்மீ ஆகியவற்றின் ஆரம்ப மற்றும் நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக LG W10 இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

யூகங்கள்

வழக்கமான தரம் (standard), ஆழமான தரம் (depth) மற்றும் விரிவு கோணம் (wide-angle) என்று மூன்று பின்பக்க காமிராக்களுடன் புகைப்படம் எடுக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக எல்ஜி டபிள்யூ 10 போன் இருக்கும்.

தற்பட (செல்ஃபி) காமிராவுக்கு வாட்டர்டிராப் நாட்ச் கொண்டதாய் இருக்கும்

ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்

கறுப்பு, பச்சை மற்றும் சாம்பல் (கிரேடியண்ட்) என்று மூன்று வண்ணங்களில் கிடைக்கும்

பின்பக்கம் விரல்ரேகையை உணரக்கூடிய வசதி (fingerprint sensor) இருக்கும்

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டது

ஹீலியோ பி22 அல்லது ஸ்நாப்டிராகன் 439 பிராசஸர் இருக்கும்

மின்கலம் 4000 mAh திறன் கொண்டது

விலை ஏறத்தாழ 15,000 ரூபாயாக இருக்கும்.

இப்போனை அமேசான் இந்தியா தளத்தின் மூலம் வாங்கலாம்.

You'r reading எல்ஜி டபிள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்: ஜூன் 26ம் தேதி அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிட்னியை பாதுகாக்க நடைமுறை வழிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்