மோதலை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு: பேருந்துகளில் அறிமுகமாகிறது

To avert accidents AI to be enabled in govt buses

பேருந்துகள் மோதுவதை தவிர்ப்பதற்கும் தூக்க மயக்கத்தில் இருக்கும் ஓட்டுநர்களை எச்சரிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனங்களை அரசு போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த உள்ளன.

புதிய தொழில்நுட்பங்களை அரசு சார்பான நிறுவனங்கள் பயன்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று. பொது மக்கள் பயன்பாட்டுக்கான துறைகளில் இவை பயன்பாட்டுக்கு வரும்போது பொதுமக்கள் பயனடைகின்றனர்.

உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் 12,500 பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை சாதனங்களை பொருத்த உள்ளது. கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் நீண்ட தூரம் மற்றும் இரவு நேரம் பயணிக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.

மோதலை தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை கடந்த ஓராண்டுக்கு மேலாக சோதனையடிப்படையில் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் 10 பேருந்துகளில் தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாகவும் விரைவில் அதிக பேருந்துகளில் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு டெண்டர் கோர இருப்பதாகவும் கர்நாடக மாநில போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில போக்குவரத்து கழகம் ஆறு மாதங்களுக்கு மேலாக ஆறு பேருந்துகளில் இதை சோதனையடிப்படையில் பயன்படுத்தி வருகிறது. அப்பேருந்துகள் இக்காலகட்டத்தில் விபத்தில் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பேருந்தின் முன்பக்கமுள்ள பம்பரில் பொருத்தப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனம் 180 அடி தொலைவில் உள்ள பொருள்களை கண்காணிக்கும். மோதல் நடப்பதற்கான ஆபத்தை உணர்ந்து 'பீப்' ஒலி எழுப்பி ஓட்டுநரை எச்சரிக்கும். பேருந்தின் முகப்பு விளக்கின் அருகில் இன்னொரு சாதனம் பொருத்தப்படும். அது ஓட்டுநர் தூக்க மயக்கத்தில் இருப்பதை கண்டறிந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும் என்று இத்தொழில்நுட்ப பணிகளை செய்து வரும் மும்பை நிறுவனம் ஒன்றின் இயக்குநர் பரிதோஷ் டாக்லி கூறியுள்ளார்.

You'r reading மோதலை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு: பேருந்துகளில் அறிமுகமாகிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வருகிறது தூக்கப் பயிற்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்