16ஆயிரம் ரூபாய்க்கு 64 எம்.பி.. இன்று 12 மணிக்கு ரியல்மி எக்ஸ் டி அறிமுகம்!

Realme XT starts Sale today in India

48எம்.பி. கேமரா ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக தற்போது ரியல்மியின் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட் போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது.

ஸ்மார்ட்போன்கள் என்றாலே தற்போது கேமரா ஆப்ஷன்களுக்கு தான் முதல் உரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட் போன் இன்று அறிமுகமாகிறது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு இதற்கான ஃபிளாஷ் சேல் நடைபெற உள்ளது.

இதன் ஆரம்ப விலை வெறும் 15,999 மட்டுமே என்பது, பட்ஜெட் விலையில் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட் போனை வாங்க விரும்புவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்டாகவே கருதப்படுகிறது.

15,999 விலையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும், 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் 16,999க்கும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்போன் 18,999க்கும் விற்பனைக்கு வருகிறது.

இதில், ஃபுல் ஹெச்.டி. சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே, 4000எம்.எச் பேட்டரி, இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட், 4 பின்பக்க கேமரா மற்றும் ஸ்நாப் டிராகன் 712 என்ற அதிவேக புராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத கால நோ காஸ்ட் இ.எம்.ஐ., வசதியும் ஒரு முறை ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மெண்ட் வசதியும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

You'r reading 16ஆயிரம் ரூபாய்க்கு 64 எம்.பி.. இன்று 12 மணிக்கு ரியல்மி எக்ஸ் டி அறிமுகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாப சாவு.. 35 பேரை தேடும் பணி தீவிரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்