வந்துவிட்டது ஸ்மார்ட் ஹெல்மட் !

Smart Helmet has arrived

துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையம் பொது இடங்களில் உலா வரும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய "கேசி எண் 901 " என்ற நவீன தெர்மல் ஸ்கேனிங் ஹெல்மெட்டை பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது.இந்த ஹெல்மட்டின் உதவியால் துபாய் சிலிகன் ஓயசிஸ் பகுதியில் நடமாடும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

உடல் வெப்பநிலை 38 அல்லது அதற்கு மேல் அதிகரித்தால் அது காய்ச்சலாக கருதப்படும் . அந்த ஹெல்மட்டின் திரையில் மனித வெப்பநிலை தோன்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி " இன்பெரா ரெட் " எனப்படும் அகச்சிவப்பு கதிர்கள் உதவியுடன் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு உடல் வெப்பநிலை அதிகமாக காணப்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அந்த நபர்கள் மருத்துவ ஊழியர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வெப்பநிலை கண்டறிய தனியாக கருவி ஏதும் தேவைப்படுவதில்லை . இதனால் மக்கள் மிக எளிதாக நடமாட முடிகிறது .

You'r reading வந்துவிட்டது ஸ்மார்ட் ஹெல்மட் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல்ஹாசன் 232 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. டிரெண்டிங் செய்யும் ரசிகர்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்