கொரோனா வீடியோ கேமை உருவாக்கிய கியூபா நாட்டு சிறுவன் !

The Cuban boy who created the Corona video game

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து பல நாடுகளும் பொது முடக்கத்தை அறிவித்து இருந்தன. இதனால் மாதக்கணக்காய் பள்ளி குழந்தைகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது .

இந்நிலையில் கியூபா நாட்டின் ஹவானா தீவைச் சார்ந்த வெலாஸ் என்ற 12 வயது சிறுவன் , கொரோனா வைரஸ் குறித்த வீடியோ கேமை உருவாக்கி அசத்தியுள்ளான் .

இந்த கேமானது கொரோனா வைரஸ் உருவான இடம் மற்றும் அதை தடுக்கும் தடுப்பூசி மூலக்கூறுகள் மற்றும் அதனை அழிக்கும் வழிமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியவாறு இந்த வீடியோ கேம் உருவாக்கப்பட்டதாக அந்த சிறுவன் கூறியுள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக , மாதக்கணக்கில் வீட்டில் இருந்ததால் , தம்மால் இந்த வீடியோ கேமை உருவாக்க முடிந்ததாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.

You'r reading கொரோனா வீடியோ கேமை உருவாக்கிய கியூபா நாட்டு சிறுவன் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாஸ்குக்கு பதிலாக மலைப்பாம்பு அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்