எக்ஸ்பாக்ஸ் சீரிஸ்: நாளை முதல் ஆர்டர் செய்யலாம்.!

Xbox Series: Order from tomorrow!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் சீரிஸ் எஸ் ஆகியவற்றுக்கான முன் பதிவு இந்தியா உள்ளிட்ட 37 நாடுகளில் நாளை (செப்டம்பர் 22) தொடங்குகிறது.அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம் (பிரிட்டன்), கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐரோப்பியப் பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நாளை இப்பதிவு ஆரம்பமாகும்.

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்

எச்டிடி: 1TB PCie Gen 4 NVME SSD
பிராசஸர்: Custom 8-core AMD Zen 2 CPU @ 3.8GHz
கிராபிக்ஸ்: Custom AMD RDNA 2 GPU 52 CUs @ 1.825 GHz
இயக்கவேகம்: 16 ஜிபி
எடை: 4.45 கிலோ

இதன் முன்பதிவு விலை ரூ.49,990/-

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்

எச்டிடி: 512GB PCie Gen 4 NVME SSD
பிராசஸர்: Custom 8-core AMD Zen 2 CPU @ 3.8GHz
கிராபிக்ஸ்: Custom AMD RDNA 2 GPU 20 CUs @ 1.565GHz
இயக்கவேகம்: 10 ஜிபி ஜிடிடிஆர்6

இதன் முன்பதிவு விலை ரூ.34,990/-

இந்தியாவில் செப்டம்பர் 22 காலை 9 மணிக்கு இவற்றுக்கான முன்பதிவு தொடங்கும். அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையவழி அங்காடிகளில் பதிவு செய்யலாம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் செப்டம்பர் 22 (காலை 8 மணி PT / பகல் 11 மணி ET), ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் அன்றைய தினம் காலை 9 மணி (CEST)க்கும் மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட தளங்களில் தொடங்கும்.

You'r reading எக்ஸ்பாக்ஸ் சீரிஸ்: நாளை முதல் ஆர்டர் செய்யலாம்.! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேளாண் சட்டங்கள் என்ன.. முதல்வர் எடப்பாடிக்கு பாடம் எடுக்கும் ஸ்டாலின்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்