சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி !

Bank of India offers CCTV repair training

இந்தியன் வங்கியின் சயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தருமபுரி , இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் தற்போது சிசிடிவி கேமரா நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி , பெண்களுக்கான தையல் பயிற்சி ,கறவை மாடு வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன . இப்பயிற்சியில் சேர் விரும்புவோர் , வருகிற அக்டோபர் 1 வரை விண்ணப்பிக்கலாம்.18 முதல் 45 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறம் சார்ந்தவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் , தங்களது பெயர் , முகவரி , விரும்பும் பயிற்சி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை நிரப்பி நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04342-230511 ,234464 மற்றும் 9442274912 என்கின்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

You'r reading சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 6 மாதங்களுக்குப் பின் தாஜ் மஹால் திறப்பு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்