இந்தியன் வங்கியில் ஐபி இ- நோட் மின்னணு சேவை அறிமுகம் !

new feature launched in indian bank

இந்தியன் வங்கியின் அலுவலகப் பணிகளை காகிதப் பயன்பாடின்றி மின்னணு முறையில் மேற்கொள்வதற்காக, ஐபி இ- நோட் எனும் மின்னணு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சேவையை இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பத்மஜா சந்துரு திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் இந்தியன் வங்கி தான் வலிமையான தகவல் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது எனவும் கூறினார். மொபைல் செயலி, நெட் பேங்கிங், கியூஆர் கோட் அடிப்படையில் பண பரிவர்த்தனை போன்ற சேவைகளை வழங்கி வருவதாகவும் கூறினார்.

இதன்மூலம் காகிதங்கள், பிரிண்டிங் ஆகியவற்றுக்கு செய்யப்படும் செலவுகள் குறைவதோடு, அலுவலக பணிகளையும் விரைவாக முடிக்க முடியும் என்றும் கூறினார்.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சசி தரன், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர்கள் எம்.கே.பட்டாச்சார்யா, வி.வி.ஷெனாய், கே.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You'r reading இந்தியன் வங்கியில் ஐபி இ- நோட் மின்னணு சேவை அறிமுகம் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாபர்மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்