வீடியோவை மியூட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் முயற்சி

வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. செய்திகள் தாமாகவே அழியக்கூடிய டிஸ்ஸப்பிரியங் முறை, எப்போதும் ஒலியெழுப்பாத ஆல்வேஸ் மியூட் முறை மற்றும் பணமில்லா பரிவர்த்தனைக்கு வாட்ஸ்அப் பே என்று பல்வேறு அம்சங்கள் சமீபத்தில் அறிமுகமாகி உள்ளன. வாட்ஸ்அப் நிறுவனம் இன்னொரு முறை குறித்தும் ஆராய்ச்சி செய்து வருவதாக வேபர்டாஇன்ஃபோ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மியூட் வீடியோ ஃபீச்சர் எனப்படும் இந்த அம்சம், தொடர்பில் உள்ளவர்களுக்கு வீடியோ அனுப்பும் முன்னர் அல்லது நிலைத்தகவலாக (ஸ்டேட்டஸ்) வைக்கும் முன்னர் அதன் ஒலியை நீக்கி மியூட் முறையில் வைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

வீடியோவை வேண்டிய அளவு வெட்டுவதுடன், அதன் ஒலியை நீக்கிவிடவும் இது உதவும். ரீட் லேட்டர் என்ற அம்சமும் வாட்ஸ்அப்பில் வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஆர்கைவ் சாட்ஸ் என்று கூறப்படும் பழைய உரையாடல்களை, பின்னர் வாசிக்க வேண்டியவை என்று குறிப்பிட 'ரீட் லேட்டர்' என்ற வகைப்பாடு உதவும். 'ரீட் லேட்டர்' என்று ஒரு செய்தியை வகைப்படுத்திவிட்டால், அதின் பின்பு வரும் நோட்டிஃபிகேஷன் என்னும் அறிவிக்கைகள் வராது. 'ஆர்கைவ் இஸ் நவ் ரீட் லேட்டர்' என்று இந்த அம்சத்தை பெரிய அளவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You'r reading வீடியோவை மியூட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் முயற்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெள்ளையினத்தினருக்கே முக்கியவதும்?!.. நிறவெறி சர்ச்சை இங்கிலாந்து கிரிக்கெட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்